பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூ விழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும். ஒருமுறை சிவ பெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்போது அங்கே சிவபெருமான் இருப்பதை அறிந்திடாமல் வந்த மன்மதனும் ரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மன்மதன் விளையாட்டாக ஒரு பானத்தை ரதி மீது ஏவ அது நேராக தவத்திலிருந்த சிவபெருமான் மீது பட்டது. இதனால் தவம் கலைந்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் மதன்பட்டவூர் என்றானது. மன்மதனு க்கு உயிர் பிச்சை தரவேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான். இந்த இடம் பாலத்தளி எனப்படுகிறது.
இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் காமன் பண்டிகை நடக்கிறது. இங்குள்ள அம்மன் பெரிய நாயகி எனப்படுகிறாள். அவளை வழிபட்டால் மண வாழ்வு சிறக்கும் குழந்தைபேறு கிடைக்கும் நோய் தீரும் வயதானவர்கள் புராதன் வனேஸ்வரர் பெரிய நாயகியை தரிசித்தால் நிம்மதி நிலைக்கும் இங்குள்ள விநாயகரின் காதிலுள்ள துவாரங்களில் வேண்டுதல்களை நினைத்து பக்தர்கள் பூக்களை வைப்பர். அவற்றை விநாயகர் உள்ளே இழுத்துக்கொண்டா ல் வேண்டுதல் நிறைவேறும் இவரை பூ விழுங்கி விநாயகர் என்கின்றனர்.